4ம்தெரிஞ்சவன் பக்கம்: திரை கண்ணோட்டம் ...

w3தமிழ் எழுதி

Wednesday, March 5, 2008

திரை கண்ணோட்டம் ...

தூண்டில் - விமர்சனம்!
காதலியை ஏமாற்றிவிட்டு வேறொருத்தி கழுத்தில் தாலி கட்டும் காதலனை காதலி பழிவாங்கும் கதை. எப்படி பழிவாங்குகிறார் என்பதில் வாடகைதாய் சமாச்சாரத்தைப் புகுத்தி சவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் கே.எஸ். அதியமான்!

கணவன், மனைவியாக வரும் ஷாம், சந்தியாவின் நெருக்கமும், உருக்கமும் நேர்த்தி. காதலனால் கைவிடப்பட்டு அவனைப் பழிவாங்கும் வன்மத்துடன் திரியும் திவ்யாவின் மிடுக்கும், துடுக்கும் கிளாஸ். இந்த இரு பெண்களுக்கும் நடுவில் மத்தளமாக ஷாம்.

வெகுளியாக குழைவதாகட்டும், வெகுண்டெழுந்து சீறுவதாகட்டும், இயலாமையில் குமைவதாகட்டும்... ஒவ்வொரு காட்சியிலும் அனாயசமாக ஊதித் தள்ளுகிறார் சந்தியா. சாவித்ரி, ரேவதி வரிசையில் தாராளமாக சந்தியாவுக்கும் தரலாம் ஒரு சிம்மாசனம்!

கோபப்படவும் முடியாது, குலுங்கி அழவும் முடியாது. அப்படியொரு சூழலில் ஓர் ஆண் மகன் என்ன செய்வான்? அதை அளவு மீறாமல் செய்திருக்கிறார் ஷாம்.

திவ்யா ஷாமின் முன்னாள் காதலி என தெரியவரும் போது சின்ன ஷாக். கோர்ட்டில் நான்தான் குழந்தையின் உண்மையான அம்மா என்று அவரே அடுக்கடுக்காக காரணம் சொல்லும் போது, அடப்பாவி என சொல்ல வைக்கிறார்.

எளிமையான இந்த காதல் த்ரில்லருக்கு எம் டி.வி ஸ்டைலில் எடிட்டிங் செய்திருப்பது பூனைக்கு புலி வேஷம் போட்ட மாதிரியிருக்கிறது. ஷாம் டெலிஃபோனில் நம்பர் போடும் காட்சியை குளோசப்பில் இரு வேறு கோணங்களில் ஒரே நேரத்தில் திரையில் காட்டுகிறார்கள். இது எதற்கு? நடப்பது, பேசுவது என எல்லா காட்சிகளும் இப்படி இரண்டு மூன்று தனித்தனி காட்சிகளாக திரையில் காட்டப்படுகிறது. காட்சிகள் மாறும்போது பயன்படுத்தியிருக்கும் எடிட்டிங் யுக்திகளும் கதைக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. மாறாக படம் மீதான பார்வையாளனின் ஓர்மையை சிதைக்கவே உதவுகின்றன.

1 comment:

KaRun said...

its nice to see you again...